பதுளை – கொழும்பு தொடரூந்து போக்குவரத்து பாதையில் நேற்று இரவு 10 மணியளவில் ஏற்பட்ட தொடரூந்து தடம் புரள்வு காரணமாக மலையக தொடருந்து சேவைகள் சுமார் மூன்று மணித்தியாலயங்கள் பாதிப்படைந்தன.
குறித்த தடம் புரள்வு தலவாக்கலை தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
நானுஓயாவிலிருந்து தலவாக்கலை வரை தொடரூந்து பாதைக்கு கருங்கற்கள் போடும் பணியில் ஈடுப்பட்ட வந்த தொடரூந்தே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.
இதன் காரணமாக பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இரவு நேர தபால் தொடரூந்து தலவாக்கலை புகையிரத நிலையத்தில் சுமார் மூன்று மணித்தியாலயம் தரித்து வைக்கப்பட்டிருந்தது.
இன்று அதிகாலை 1.30 மணியளவில் தொடரூந்து பாதையை சீர் செய்துள்ளதோடு, மலையகத்திற்கான தொடரூந்து சேவை வழமைக்கு திரும்பியுள்ளதாக தலவாக்கலை தொடருந்து நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தலவாக்கலை தொடரூந்து நிலையத்தில் தரித்து வைக்கப்பட்ட இரவு நேர தபால் தொடரூந்து கொழும்பு நோக்கி புறப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க