நைஜீரியாவின் தென் பகுதியில் உள்ள டென்யூ மாகாணத்தில் பெற்றோல் ஏற்றிக் கொண்டு வீதியில் சென்ற லொறி ஒன்று , சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்தது. இதில் பாதை முழுவதும் பரவிய பெற்றோலை எடுப்பதற்காக மக்கள் குவிந்த போது , திடீரென லொறி தீப்பிடித்து வெடித்து சிதறியது. இதில் 50 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். 70 பேர் காயமடைந்துள்ளனர்.
பெற்றோல் வீதியில் பரவியதும் அதை எடுப்பதற்காக குவிந்த மக்களை பாதுகாப்பு பணிக்கு வந்த அதிகாரிகள் விலகிப் போகுமாறு அறிவுறுத்தியும் அதனை அலட்சியப்படுத்தியதின் காரணமாக இவ்விபத்தில் சிக்குண்டனர். காயமடைந்த பலர் உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்து தெரிவிக்க