” உண்மையே வெல்லும். எனவே, ஊடகங்களுக்காக நாடகங்களை அரங்கேற்றாமல், எனக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இருப்பின் அவற்றை நிரூபிப்பதற்கு அத்துரலிய ரத்ன தேரர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.” – இவ்வாறு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ, எஸ்.பி. திஸ்ஸாநாயக்க உள்ளிட்ட அரசியல்வாதிகள் சிலர் ஊடகங்கள் வாயிலாக தன்மீது சுமத்தி வந்த அவதூறுகள் தொடர்பில் ரிஷாட் பதியுதீன் பொலிஸ் திணைக்களத்தில் ஏற்கனவே முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார்.
அந்த முறைப்பாடு தொடரில் மேலதிக தகவல்களையும் ஆவணங்களையும் வழங்கும் நோக்கில் ரிஷாட் இன்று (02) காலை திட்டமிடப்பட்ட குற்றங்களை தடுக்கும் பிரிவுற்குச் சென்று வாக்கு மூலம் ஒன்றை வழங்கினார்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
“தன் மீது சுமத்தப்பட்டு வரும் அத்தனை குற்றச்சாட்டுக்களும் பொய்யானவை . பொலிஸ் திணைக்களம் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தெளிவான அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. எனினும். இவர்கள் வேண்டுமென்றே தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்து வருகின்றனர்.
குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரரும் திரும்ப திரும்ப ஒரே அவதூறை சுமத்தி வருகிறார். முடிந்தால் அவர் பொலிஸில் முறையிட்டு தன் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதே தர்மம்.” என்றார்.
கருத்து தெரிவிக்க