அமெரிக்காவில் இடம்பெற்ற சிறிய ரக விமான விபத்தில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தரப்பு தெரிவிக்கின்றன.
இரண்டு விமான ஊழியர்களுடனும் 8 பயணிகளுடனும் டலாசில் இருந்து பிளோரிடாவின் சென்பீட்டர்ஸ் பகுதிக்கு செல்லவிருந்த விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் உயிரிழந்தவர்களின் விபரம் இன்னும் கண்டறியப்படவில்லை என குறிப்பிடபப்டுகின்றது.
குறித்த விமானத்தை அண்மையில் ஒருவரிடத்தில் இருந்து மற்றொருவர் வாங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானம் பயணத்தை தொடங்கிய நிலையில் அதன் ஒரு சிறகு விழுந்துள்ளதோடு விமானம் விழுந்து நொறுங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
விபத்துக்கான காரணம் தொடர்பில் தற்போது ஆராயப்படுகிறது.
கருத்து தெரிவிக்க