புலம்பெயர்ந்த சமூகத்தினரது நோக்கங்களை சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் நிறைவேற்றி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டை ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போது முன்வைத்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அண்மையில் விஜயம் செய்த ரத்தன தேரர், தமிழ் – சிங்கள ஒற்றுமை அணியை உருவாக்குவது அவசியம் என்று கூறிய கருத்தை சுட்டிக்காட்டி மேலும் குற்றஞ்சாட்டினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்கொண்டுசெல்ல முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
கருத்து தெரிவிக்க