மதுகம பகுதியில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அகலவத்தை பிரதேச செயலகத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த மனோஜ் ஜயதிலக (44 ) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவரது படுக்கையறையின் ஜன்னலை உடைத்து, அவர் உறங்கி கொண்டிருந்த போது கைக்குண்டு ஒன்று வீசப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர் வெளியே வந்தபோது, குறித்த நபர் அவரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளார் என பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவரின் உறவினரால் இந்த கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் சந்தேகிப்பதோடு அந்த கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கின்றனர்.
கருத்து தெரிவிக்க