இலங்கையில் மரண தண்டனையை அமல்படுத்துவதற்கான காரணங்களை ஐ.நாவிற்கு விளக்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸுடன் நேற்றிரவு தொலைபேசியில் உரையாடியபோது, அவர் இதனை தெளிவுப்படுத்தியதாக கூறியுள்ளார்.
பொலன்னறுவையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
சட்டவிரோத போதைப்பொருள் மோசடியில் இருந்து நாட்டின் எதிர்காலத்தையும் சந்ததியினரையும் பாதுகாப்பதற்காக போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்.
தண்டனை பெற்ற நான்கு போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க அனுமதி வழங்கியுள்ளேன். இதற்கு எதிராக பேசுபவர்கள் அனைவரும் போதைப்பொருள் மோசடிகளுக்கு உதவுவதாவே கொள்ள வேண்டும்.
எந்தவித தனிப்பட்ட காரணங்களுக்காகவும் தான் இதற்கு அனுமதியளிக்கவில்லை என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க