உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ரிஷாட் பதியூதீனின் வாக்குமூலம் (Live Update)

*  ஊடகங்களில் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் உள்ளவர் சஹ்ரான் இல்லை எனவும் அவர் வேறு ஒரு மௌலவி அவர் தெரிவித்தார்.

* தற்கொலை தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் தன்னுடைய தாயின் உறவினர் என கூறுவதில் உண்மை இல்லை எனவும் அவர் கூறினார்.

*கடந்த யுத்த காலத்தில் இந்தியாவுக்கு செல்லாமல் நாட்டின் மீது கொண்டிருந்த அன்பின் காரணமாக தான் இலங்கையிலேயே தங்கியதா இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

* இஸ்லாம்  மார்க்கத்தின் பெயரை தீவிரவாதிகள் பயன்படுத்தியமைக்கு தூய்மையான இஸ்லாமியர் என்ற வகையில் மன்னிப்பு கோரினார்.

* நாட்டில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை திசை திருப்ப பல அரசியல்வாதிகள் முயற்சி செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

* பயங்கரவாதிகளுக்கும் இஸ்லாம் மார்க்கத்தில் இடமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

* வில்பத்து தொடர்பாக வெளியாகும் தகவல்கள் அனைத்தும் பொய்யாவை எனவும் அவர் கூறினார்.

* மன்னாரில் தனக்கும் தன்னுடைய 3000 ஏக்கர் காணி இருப்பதாக தெரிவிக்கப்படும் கருத்தில் உண்மையில்லை. அவ்வாறு காணி இருந்தால் அவற்றை அரச உடமையாக்குமாறும் அவர் குறிப்பிட்டார்.

* முஸ்லிம் சமூகம் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வன்முறைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

* இவ்வாறான வன்முறைகள் காரணமாக முஸ்லிம் மக்களின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

* வீதிகள் அரபு மொழிகளில் பெயர்பலகை இடுவது சட்டவிரோதமாந்து  என்பதை தானும் ஏற்றுக்கொள்வதாகவும் ரிஷாட் பதியூதீன் குறிப்பிட்டுள்ளார்.

* அல்குர் ஆனில் எந்த ஒரு இடத்திலும் தீவிரவாதத்துக்கு இடமளிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

*. சவுதி அரேபியாவின் சட்டங்களையும் நீதியையும் இலங்கைக்கு கொண்டுவர முடியாது எனவும் அவர் கூறினார்.

* இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் சமாதானத்துடன் வாழ்வதன் ஊடாகவே சமூக, பொருளாதாரத்தைக் கட்டி எழுப்ப வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

* இதுவரை பாதுகாப்புத் தரப்பால் தனக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கவில்லை எனவும் கூறினார்.

தீவிரவதிகள் குறித்து தாக்குதலுக்கு பின்னரே தெரியும்: ரிஷாட்

* இலங்கையில் தாக்குதல்களை நடத்தியவரகள் தொடர்பில் தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு பிறகு தான் தனக்கு தெரியும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

* அத்துடன், சஹ்ரான் என்பவர் ஒரு மௌலவியோ மதத் தலைவரோ கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரிஷாட் பதியூதின் நாடாளுமன்ற விஷேட தெரிவுக்குழுவில் முன்னிலை!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் சற்றுமுன்னர் நாடாளுமன்ற விஷேட தெரிவுக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

கடந்த ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களும் அதற்கு பின்னரான குற்றச்சாட்டுக்களும்  தொடர்பில் வாக்குமூலங்களை தற்போது  வழங்கிவருகிறார்.

கருத்து தெரிவிக்க