நடிகர் விக்ரம் மஹாவீர் கர்ணா என்கின்ற வரலாற்று படத்தில் நடிக்கின்றார் என முன்பு கூறப்பட்டது. ஆனால் அந்த படம் தற்போது ட்ராப் ஆகிவிட்டது என்று கூறப்படுகின்றது.
அதனால் அதற்கு ஒதுங்கியிருந்த தேதிகளை தற்போது இயக்குனர் லிங்குசாமிக்கு கொடுக்க முடிவெடுத்துள்ளாராம் விக்ரம்.
சண்டக்கோழி 2 படம் பெரிதாக வசூலிக்காத நிலையில் லிங்குசாமி தற்போது ராகவா லாரன்ஸ் உடன் ஒரு படத்தில் பணியாற்றுகின்றார் என்று கூறப்படுகின்றது.
தற்போது விக்ரம் கொடுத்துள்ள வாய்ப்பால் மகிழ்ச்சியில் இருக்கின்றாராம் லிங்குசாமி.
இந்த படத்தினை ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது என கூறப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க