நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்க எடுத்த முயற்சி உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பத்தி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
18 ஆவது திருத்தச் சட்டத்தை மாற்றி 19ஆவது திருத்தச் சட்டமூலத்தை தயாரித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பத்தி விக்ரமரத்ன ஊடகங்களுக்கு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சியின் அழுத்தங்கள் காரணமாக, 19 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்வாங்கப்பட்ட பல முக்கியமான சரத்துக்கள் வலுவிழக்கச் செய்யப்பட்டதாலேயே பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து நாடாளுமன்றத்திற்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்குமாயின், 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் சிறந்த முறையில் இருக்கும் எனவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்திருந்தார்.
தற்போதைய நிலையில், ஜனாதிபதிக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையில் பிரச்சினைகள் காணப்படும் வகையில் அரசியலமைப்பு திருத்தம் அமைந்துள்ளதாகவும் ஜயம்பத்தி விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க