மஸ்கெலியா பிளாண்டேஷனுக்கு உட்பட்ட சாமிமலை குமரித்தோட்டத்தில் பொது மக்களால் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தோட்ட நிர்வாகத்தினால் இரண்டு மாதங்களுக்கு முன்னர் தோட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட 2 ஏக்கர் காணியில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மண் அகலும் இயந்திரம் மூலமாக மைதானத்துக்கான தரைப்பகுதி சீராக்கப்படும் பணிகள் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதென தோட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த மைதானத்தை முறையாக அமைக்க மக்கள் பிரதிநிதிகள் உதவிகளை செய்ய வேண்டும் எனவும் தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க