ஹட்டனிலிருந்து டிக்கோயா செல்லும் பாதை முறையற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்திய பிரதமர் மோடியின் மலையக வருகையின் போது இந்த பாதை அவசர அவசரமாக செப்பனிடப்பட்டது.
இந்த பாதை செப்பனிடப்பட்டு இரண்டே வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் பாதையில் ஆங்காங்கே குழிகள் ஏற்படுகின்றன.
இவை அவ்வப்போது சீராக்கப்படுகின்ற போதும் பாதை தரமானதாக இல்லையென்ற அச்சம் இப்பகுதியினரிடையே காணப்படுகின்றது என மக்கள் தெரிவிக்கின்றனர்.
டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் இந்த பாதையினை பயன்படுத்துவதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கருத்து தெரிவிக்க