இலங்கை மேலும் பல ரஸ்ய தாக்குதல் உலங்கு வானூர்திகளை கொள்வனவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி ரவீந்திர விஜயகுணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.
மொஸ்கோவில் இடம்பெறும் பாதுகாப்பு அமர்வில் பங்கேற்றுள்ள அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
உலங்கு வானூர்திகளை பொறுத்தவரை அவை ஐக்கிய நாடுகள் அமைதிப்பணிகளுக்காக தேவைப்படுகிறது.
எம்ஐ 17 மற்றும் எம்ஐ 24 போன்ற உலங்கு வானூர்திகள் சிறப்பாக செயற்படக்கூடியவை.
அவற்றை கொள்வனவு செய்வதற்கே இலங்கை அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
இலங்கை சிறிய நாடு பாரிய தொகை ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை கொள்வனவு
செய்யவேண்டுமென்றால் அதற்கு கடன் திட்டங்கள் அவசியமாகும் என்றும் ரவீந்திர விஜயகுணவர்த்தன குறிப்பிட்டார்.
கருத்து தெரிவிக்க