விளையாட்டு செய்திகள்

இங்கிலாந்துக்கு 286 ஓட்ட இலக்கை நிர்ணயித்தது அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 286 ஓட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உலகக்கிண்ண கிரிக்கட் தொடரில் இங்கிலாந்து அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான போட்டி இன்று இடம்பெற்று வருகின்றது.

இந்த போட்டியில் நாணயசுழட்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தெரிவுசெய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 285 ஓட்டங்களை எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக அணித்தலைவர் பிஞ்ச் 100 ஓட்டங்களும், வார்னர் 53ஓட்டங்களும், ஸ்டீவ் ஸ்மித் 38 ஓட்டங்களும் சேர்த்தனர்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து 6 ஓவர் முடிவில் 3 விக்கட்டினை இழந்து 26 ஓட்டங்களை பெற்றுள்ளது.

கருத்து தெரிவிக்க