உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

‘போருக்கு அஞ்சி அமெரிக்காவுக்கு ஓடியவரே கோட்டா’ – வெல்கம சாட்டையடி

” போருக்கு பயந்து நாட்டைவிட்டு ஓடியவரே கோட்டாபய ராஜபக்ச” – என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான குமார வெல்கம விமர்சித்துள்ளார்.

களுத்துறையில் இன்று (25) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு விமர்சனக் கணைகளைத் தொடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” தேசிய பாதுகாப்பை முன்னிலைப்படுத்தியே ஜனாதிபதி வேட்பாளர் நிறுத்தப்படவேண்டுமெனில் அதற்கு சரத்பொன்சேகாவே தகுதியானவர். இந்த நாட்டில் பாதுகாப்பு தொடர்பில் அவருக்கு போதிய அனுபவம் உள்ளது. போர் முடிவடையும்வரை சேவையில் இருந்தவர்.

ஆனால், கம்மன்பில கூறும் நபர் ( கோட்டாபய ராஜபக்ச) போர்காலத்தில் நாட்டை விட்டு அமெரிக்காவுக்கு ஓடியவர்.  எனவே, பாதுகாப்பு குறித்து என்ன உத்தரவாதம்?

அப்படியானால் 2010 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேக்கா ஏன் தோல்வியடைந்தார் என நீங்கள் கேள்வி எழுப்பலாம். இலவசக் கல்வியை அறிமுகப்படுத்திய சி.டபிள்யூ. சி. கன்னங்கரவையே தேர்தலில் தோற்கடித்த நாடு இது.” என்றார் குமார வெல்கம எம்.பி.

 

 

 

 

 

கருத்து தெரிவிக்க