அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை முன்வைக்க ஆதரவளித்த ஜனாதிபதி இப்பொழுது அது சிக்கலானது என்று கூறுவது நகைப்புக்குரியது என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
19 வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கருத்து தெரிவித்த நிலையில் அதற்கு பதில் அளிக்கும் வகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
81 ,19 வது அரசியலமைப்பு திருத்தத்தை இரத்து செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கிறார். அவ்வாறு செய்வது, 2015 ஆம் ஆண்டு மக்கள் வழங்கிய ஆணைக்கு முரணானது என்பதால் எவரும் அதனை ஆதரிக்க போவதில்லை.
நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான வணக்கத்திற்குரிய மாதுலுவாவே சோபித தேரர் எடுத்த முயற்சிகளை ஜனாதிபதி புறக்கணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என சுகாதார அமைச்சர் ராஜித தெரிவித்தார்.
இதேவேளை அரசியலமைப்பில் 20 ஆவது திருத்தத்தை கொண்டுவருவதன் மூலம் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என்று அவர் இதன்போது முன்மொழிந்தார்.
கருத்து தெரிவிக்க