21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திவரும் விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வு நாளை (26) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதன்போது இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகி சாட்சியமளிக்கவுள்ளனர்.
அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும் அழைத்து வாக்குமூலம் பெறுவதற்கு விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது.
இவர்கள் பங்கேற்றதவறினால் அது சட்டவிரோத நடவடிக்கையாகவே அமையும் என தெரிவுக்குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
கருத்து தெரிவிக்க