உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

கோட்டாவே ஜனாதிபதி வேட்பாளர்! கட்சித் தலைவர்களிடம் மஹிந்த உறுதி!!

” பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவே கூட்டு எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராவார். இது தொடர்பில் கட்சித் தலைவர்களுக்கு மஹிந்த ராஜபக்ச தெளிவுபடுத்தியுள்ளார்.” –  என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டின் தேசிய பாதுகாப்பை கோட்டாபய ராஜபக்சவால் மட்டுமே உறுதிப்படுத்தமுடியும். இதன்காரணமாகவே அடுத்த ஜனாதிபதி பதவிக்கு அவரின் பெயர் நாட்டு மக்களால் முன்மொழியப்பட்டது. அதையே நாமும் பரப்புரையாக முன்னெடுத்தோம்.

கோட்டாபயவே ஜனாதிபதி வேட்பாளர் என்பதை மஹிந்த ராஜபக்ச எம்மிடம் உறுதிப்படுத்திவிட்டார். ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். வேட்பாளர் விவகாரத்தில் இறுதி நேரத்தில் எந்த மாற்றமும் வராது.

அதேவேளை, கூட்டு எதிரணியிலுள்ள பெரும்பான்மையான உறுப்பினர்களின் இந்த முடிவுக்கு குமார வெல்கம ஆதரவு வழங்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் தனிப்பட்ட ரீதியில் அவரால் முடிவெடுக்க முடியும். அதற்கு தடையாக இருக்கமாட்டோம்.” என்றும் கம்மன்பில குறிப்பிட்டார்.

 

 

 

கருத்து தெரிவிக்க