உள்நாட்டு செய்திகள்

பிரபல இலங்கை பாடகி இந்திராணி காலமானார்

பிரபல பாடகி இந்திராணி தனது 83 வயதில் காலமானார் என அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

‘சுது சந்த எலியே’, ‘வெசாக் கெகுலு’, ‘ஆத்தா ஆஹேஸ்’ போன்ற பல பிரபலமான சிங்கள பாடல்களை இவர் பாடியுள்ளார்.

இவர் மறைந்த பிரபல பாடகர் சிசிரா சேனரத்னாவின் மனைவி என்பதோடு,  கணவருடன் இணைந்து இருவரும் இலங்கையிலும் வெளிநாட்டிலும் ‘சிசிந்திரா’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளனர்.

கருத்து தெரிவிக்க