யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட கல்வியங்காடு – சட்டநாதர் சிவன் கோவிலுக்கு முன்பாக உள்ள வீதி இதுவரை புனரமைக்கப்படாமைக்கு தமிழரசுக் கட்சியின் உட்கட்சிப் பூசலே காரணம் என மாநகர சபை உறுப்பினர் வரதராஜா பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.
இந்த வீதியில் தமிழரசுக் கட்சி மூத்த அரசியல்வாதியும் வட மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் வீடு உட்பட பல வீடுகள் உள்ளன.
இந்நிலையில் கல்வியங்காட்டில் குச்சொழுங்கைகள் முதல் அனைத்து வீதிகளும் புனரமைக்கப்பட்டுள்ள போதும் குறிப்பிட்ட இந்த வீதி மாத்திரம் மோசமான நிலையில் உள்ளது.
இதற்குக் காணரம் தமிழரசுக் கட்சிக்குள் காணப்படும் முரண்பாடுகள் என யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜா பார்த்தீபன் குற்றம் சுமத்துகிறார்
இந்த வீதியைப் கம்பரெலியா திட்டத்தின் கீழ் புனரமைத்தால் அதற்கு நிதி ஒதுக்கீடு செய்யும் இந்தப்பகுதிக்குரிய நாடாளுமன்ற உறுப்பினரின் படத்துடன் பதாகை வைப்பார்கள்.
அதை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான சீ.வி.கே. விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதுவே அந்த வீதி புனரமைப்புக்குத் தடையாக உள்ளது என அவர் தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க