” ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகவே இருக்கின்றேன்.” – என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று ( 23) தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து தகைமைகளும் எனக்கு இருக்கின்றன. எனவே, ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் கோரிக்கை விடுக்கப்படுமானால் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கு தயாராகவே இருக்கின்றேன்.
வேட்டிமனுவில் நான் கைச்சாத்திட்டால் வெற்றிவாகைசூடாமல் திரும்பமாட்டேன். இரு பக்கங்களிலிருந்தும் வாக்குகளை திரட்டுவதற்கான வல்லமை எனக்கு இருக்கின்றது.
மறுபக்கத்தில் கோட்டா அல்ல எந்த வேட்பாளர் வந்தாலும் தேர்தலை வெற்றிகரமாக சந்திப்பேன். ” – என்றார்.
கருத்து தெரிவிக்க