சர்வதேச ரீதியில் கறுப்புப்பட்டிலில் சேர்க்கப்பட்டுள்ளவர்கள் இனிமேல் வானூர்தி நிலையத்தில் வைத்தே திருப்பியனுப்பப்படவுள்ளனர்.
குடிவரவு கட்டுப்பாட்டாளர் பசன் ரட்நாயக்கவை கோடிட்டு “ஊடகன்” வாராந்த செய்தித்தாள் இதனை தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் சர்வதேச காவல்துறையான இன்டர்போலுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் கீழ் இந்த பொறிமுறை நேற்று முன்தினம் முதல் அமுலுக்கு வந்துள்ளது.
இதுவரைக்காலமும் இலங்கையில் அந்த நடைமுறை இருக்கவில்லை.
கறுப்புப்பட்டியலில் உள்ளவர்கள் நாட்;டுக்குள் பிரவேசித்த பின்னரே அவர் தொடர்பான தகவல்களை திரட்ட முடிந்ததது.
தற்போது கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள ஒருவர் வானூர்தி தளத்துக்கு வந்தவுடனேயே அவரை அடையாளம் கண்டு திருப்பியனுப்பும் பொறிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது.
கருத்து தெரிவிக்க