உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இலங்கையில் இருந்து 8000பேர் நாடு கடத்தப்படவுள்ளனர்.

இலங்கையில் இருந்து சுமார் 8000 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர்.

இவர்கள் வீசா காலம் முடிவடைந்தநிலையில் இலங்கையில் தங்கியிருப்பவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதி விரைவில் அமைச்சரவையில் இருந்து பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

சுற்றுலா வீசாவில் வந்த இவர்கள் தற்போது நிர்மாணப்பணிகளிலும் ஏனைய தொழில்களும் ஈடுபட்டுள்ளதாக குடிவரவுக் கட்டுப்பாட்டாளர் பசன் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதில் 1680 இந்தியர்கள்,936 பாகிஸ்தானியர்கள், 683 சீனர்கள், 291 மாலைத்தீவியர்கள். 152 பங்களாதேசியர்கள், 42 ஜப்பானியர்கள் அடங்குகின்றனர்.

இதனை தவிர, நெதர்லாந்தின் 541 பேர் யுக்ரெய்னின் 167பேர், சவுதியின் 172பேர், ரஸ்யாவின் 157பேர் லொபனானின் 157பேர், அவுஸ்திரேலியாவின் 155பேர், நைஜீரியாவின் 130பேர் பிரான்ஸின் 110பேர் பிரித்தானியாவின் 44 பேர் ஆகியோரும் வீசா முடிவடைந்தபோதும் இலங்கையில் அதிக காலம் தங்கியுள்ளமை கண்டறியப்பப்ப்பட்டுள்ளதாக குடிவரவு கட்டுப்பாட்டாளர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க