வெளிநாட்டு செய்திகள்

ஈரான் மீது தாக்குதல் நடந்தால் அமெரிக்காவிற்கு பதிலடி நிச்சயம்

‘ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி தரப்படும்’ என  ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது. ஈரானுடன் அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட அமெரிக்கா, அந்நாட்டுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்தது. எனினும் ஈரான் அணு சக்தி ஒப்பந்தத்தின் விதிமுறைகளை கடைப்பிடிக்க போவதில்லை என அறிவித்தது.  ஈரானை அச்சுறுத்தும் வகையில் மத்திய கிழக்கு பிரதேசத்தில் போர்க் கப்பல்கள், விமானங்கள், ஆயுதங்களை குவித்தது அமெரிக்கா. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் கடும் முறுகல் நிலை தொடர்கின்றது.

இந்நிலையில் ஈரானின் வான் வெளியில் அனுமதியின்றி பறந்த அமெரிக்க ஆள் இல்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதை தொடர்ந்து அமெரிக்க ராணுவம் ஈரானின் கண்காணிப்பு ராடர்கள் , ஏவுகணைகள் மீது குறி வைத்து தாக்க திட்டமிட்டது. எனினும் கடைசி நேரத்தில் திட்டம் கைவிடப்பட்டது. ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சின் செய்தி தொடர்பாளர் , ஈரான் மீது தாக்குதல் நடத்துவதை அனுமதிக்கப் போவதில்லை எனவும், அவ்வாறு தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே முறுகல் நிலை அதிகரித்துள்ளதால் ஈரான் வான்வழியை தவிர்க்கும் படி இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க