நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்குப் பகுதியில் காற்றுடன் கூடிய நிலைமை காணப்படுவதுடன் மேலும் மழையுடன் கூடிய வானிலை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேல், மத்திய, சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமேல் மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் களுத்துறை, மாத்தறை, கொழும்பு, கம்பஹா மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற போது மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க