வணிக செய்திகள்

சுற்றுலாத்துறைக்கு ‘சஞ்சாரக பொட்டோ’ நிவாரணம்

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட சுற்றுலா தொழிற்துறையை மீளக் கட்டியெழுப்ப ‘சஞ்சாரக பொட்டோ’ என்ற நிவாரணப் பொதியை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த துறையை மேம்படுத்துவதற்காக, நிவாரணப் பொதியை பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது 5 இலட்சம் பெறுமதியான வட்டியற்ற கொடுப்பனவு திட்டம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதல்களினால் பாதிப்புக்குள்ளான சுற்றுலா துறைகளுக்கான நிவாரணத்தை வழங்குவதற்கும் இந்த துறைக்காக முன்னர் வழங்கப்பட்ட நிவாரணத்தை தொடர்ந்து விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி சுற்றுலாத்துறைக்கு 2020 மார்ச் மாதம் வரையில் நிவாரண காலமாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் பிரதேச அபிவிருத்தி வங்கி மூலம் நடைமுறைப்படுத்தப்படும் ‘சஞ்சாரக பொட்டோ’ என்ற நிவாரண கடன் திட்டம் நடைமுறைப்படுத்தபட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க