விளையாட்டு செய்திகள்

உலக கிண்ண கால்பந்து:இங்கிலாந்து, ஜப்பான் முன்னேற்றம்

பெண்கள் உலக கிண்ண கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணி 2–0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி தொடர்ச்சியாக 3–வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

‘டி’ பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து–ஜப்பான் அணிகள் மோதியிருந்தன.

இதில், இங்கிலாந்து அணியில் எலென் ஒயிட் 14–வது மற்றும் 84–வது நிமிடங்களில் கோல் அடித்த நிலையில் 2 -0 என்ற கணக்கில் இங்கிலாந்து வெற்றியடைந்துள்ளது.

இதேவேளை ஆர்ஜன்டினா–ஸ்கொட்லாந்து அணிகள் இடையிலான ஆட்டம் 3–3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

24 அணிகள் பங்கேற்றுள்ள 8–வது பெண்கள் உலக கிண்ண கால்பந்து போட்டி பிரான்சில் இடம்பெற்று வருகிறது .

இந்த போட்டியின் லீக் ஆட்ட முடிவில் இங்கிலாந்து (9 புள்ளிகள்), ஜப்பான் (4 புள்ளிகள்) அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின.

1 புள்ளி பெற்ற ஸ்கொட்லாந்து அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. ஆர்ஜன்டினா அணி 2 புள்ளிகளுடன் தனது பிரிவில் 3–வது இடத்தில் உள்ளது.

கருத்து தெரிவிக்க