விளையாட்டு செய்திகள்

கோபா அமெரிக்கா கால்பந்து-அரையிறுதிக்கு முன்னேறியது கொலம்பியா

46–வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டித் தொடர் பிரேசிலில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டத்தில் முன்னாள் சம்பியனான கொலம்பியா அணி, கட்டாருடன் போட்டியிட்டு அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்த போட்டியில் கொலம்பியா அணி 1–0 என்ற கோல் கணக்கில் கட்டாரை வெற்றிகண்டுள்ளது.

முதல் லீக் ஆட்டத்தில் 2–0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜன்டினாவை சாய்த்த நிலையில் கொலம்பியா அணி 2 வெற்றியுடன் முதல் அணியாக கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

காட்டருடனான போட்டி சமநிலையில் முடியும் என எதிர்பார்த்தநிலையில் 86–வது நிமிடத்தில் கொலம்பியா அணி வீரர் துவான் ஜபடா அடுத்த கோலினால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பங்கேற்றுள்ள 12 அணிகள் 3 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன.

கருத்து தெரிவிக்க