உள்நாட்டு செய்திகள்புதியவை

ரயில்வே தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு – 40 ரயில் சேவைகள் இரத்து

ரயில்வே தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பினால் 40 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அத்தோடு 9 அலுவலக ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை யாழ் தேவி ரயில் இன்று காலை சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தமது பணிபுறக்கணிப்பு தொடரும் என ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

கருத்து தெரிவிக்க