முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் இன்று 837வது நாளாக இடம்பெற்று வருகின்றது
இந்த வகையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற உறவுகள் நேற்று மாலை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்
இறுதி யுத்தத்தின் போது ராணுவத்திடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் யுத்த காலப்பகுதியில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பட்ட ரீதியிலும் காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளை தேடி இந்த தொடர் போராட்டமானது 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி முதல் முல்லைத்தீவில் இடம்பெற்று வருகின்றது
இந்த நிலையில் ஓ எம் பி அலுவலகம் தங்களுக்கு வேண்டாம் என்பதை பல தடவைகள் இந்த உறவுகள் தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட போதும் தற்போதைய சூழலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐ சி ஆர் சி நிறுவனமானது ரகசியமான முறையில் மக்களை சந்தித்து ஓ எம் பி ஊடாக வழங்கப்படுகின்ற மாதாந்த கொடுப்பனவை பெற்றுக் கொடுப்பதற்கும் போராட்டத்தில் ஈடுபடுகின்ற மக்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி மக்களை பிளவுபடுத்தும் செயற்பாட்டிலும் ஈடுபட்டுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் மரியசுரேஷ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார்
இந்த சம்பவமானது தங்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதாகவும் எனவே இந்த விடயம் தொடர்பில் ஐ சி ஆர் சி நிறுவனமானது இவ்வாறான தனது செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் எனவும் தங்களுடைய உறவுகளை பெற்றுத் தருவதற்கு ஆவன செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
கருத்து தெரிவிக்க