உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஸஹ்ரான் தொடர்பில் புலனாய்வுத்துறையினருக்கு தகவல் வழங்கினேன்.

உயிர்த்த ஞாயிறுத்தாக்குதலின் பிரதான குற்றவாளியான ஸஹ்ரான் ஏப்ரல் 21 தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர் அக்கரைப்பற்றுக்கு வந்ததாக இலங்கை தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஏகே கிஸ்ஸாம் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் நேற்று சாட்சியமளித்த அவர், அப்போது கூட தாம் ஸஹரானின் சகோதரருடைய தொலைபேசி இலக்கங்களை புலனாய்வுத்துறையினருக்கு வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

இதன்போது ஸஹ்ரான் இலங்கை தௌஹீத் அமைப்பின் உறுப்பினரா? என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரன் கேள்வி எழுப்பினார்.

பதிலளித்த கிஸ்ஸாம், இல்லை என்று தெரிவித்தார். தமக்குள் சமய வேறுபாடுகள் இருந்ததாக அவர் கூறினார்.
தமிழ் நாட்டின் தௌஹீத் அமைப்புடன் தொடர்பு இருக்கிறதா? என்று சுமந்திரன் கேட்டார்.

ஆம் தமக்கு சமய ரீதியான தொடர்புகள் உள்ளதாக கிஸ்ஸாம் குறிப்பிட்டார்.

அந்த அமைப்பின் தலைவரை இலங்கைக்கு அழைத்து வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை தௌஹீத் ஜமாத்தின் மீது ஏப்ரல் மாத தாக்குதலின் பின்னர் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

எனினும் இதனை மறுத்த கிஸ்ஸாம், தௌஹீத் என்பது ஒரு கடவுள் கோட்பாட்டை நம்புவதாகும் என்று குறிப்பிட்டார்.

ஸஹ்ரானுக்கு ஐஎஸ் உடன் நேரடி தொடர்புகள் இல்லை. எனினும் அவருடைய கோட்பாடுகள் அதனை பிரதிபலித்தன.

இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் கொல்லப்படவேண்டும் என்ற கொள்கையை அவர் வெளிப்படையாக தெரிவித்து வந்தார் என்றும் கிஸ்ஸாம் குறிப்பிட்டார்

கருத்து தெரிவிக்க