வெளிநாட்டு செய்திகள்

சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் ஆள் இல்லா விமானம்

அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை  ஈரான் சுட்டு வீழ்த்தியுள்ளதாக , அந்நாட்டின் அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட அமெரிக்கா, அந்நாட்டுக்கு எதிராக கடும் பொருளாதார தடையையும் விதித்துள்ளது. இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறிருக்க, ஈரானின் தென் பகுதியில் உள்ள ஹோர்மஸ்கான் பகுதிக்குள் வந்த அமெரிக்க ஆள் இல்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரானின் அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் உடனடியாக பதில் கூற முடியாது என அமெரிக்க இராணுவம் மறுத்து விட்டது.

கருத்து தெரிவிக்க