கிழக்கு இந்தோனேசியாவில் பப்புவா மாகாணத்தில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதென அமெரிக்க நில அதிர்வு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.
பப்புவா மாகாணத்தின் அபேபுரா நகருக்கு மேற்கே சுமார் 250 கிலோமீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 12:46 மணிக்கு, 12 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனினும் நிலநடுக்கத்தை பெரிதாக உணரவில்லை என அபேபுரா மக்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் உடனடி தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை.
கருத்து தெரிவிக்க