கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழான நெற்காணி இடாப்புக்களை புதுப்பிப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக கிளிநொச்சி கமநலசேவை நிலையத்தின் பெரும்பாக உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.
நெற்காணி உரிமையாளர்கள் குத்தகையாளர்கள் இவற்றுக்கான காணி விண்ணப்பப்படிவங்களை கமநலசேவை நிலையத்தில பெற்று பூரணப்படுத்தி காணி உரிமை ஆவணங்களுடன் எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு முன்னர் கமநலசேவை நிலையங்களில் சமர்ப்பிக்குமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் உள்ள சுமார் 21 ஏக்கர் நிலப்பரப்புக்கான நெற்காணி இடாப்புக்கள் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக சீர் அமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது.
1992ம்ஆண்டு காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட நெற்காணி இடாப்பில் இன்று வரை பயன்பாட்டில் இருக்கின்றது.
இதனால் விவசாயிகள் முதல் திணைக்களங்கள் வரை பல்வேறு பிரச்சனைகள் எதிர்கொண்டுவருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க