நாவல் மரம் எல்லா வகையான மண்ணிலும் வளரக்கூடியது. நிழல் தருகின்ற நாவல் மரம் எமக்கு பழங்களை தருவதோடு , அதன் கொட்டைகள், மரப்பட்டை, இலைகள், வேர் போன்றனவும் மருத்துவ குணங்கள் அடங்கியது.
நாவல் பழத்தை உப்பில் போட்டு சாப்பிட்டால் சூட்டினால் ஏற்படும் இருமல் தொண்டை கட்டு குணமாகும். பழுக்காத காய்களை வெயிலில் காய வைத்து தூளாக்கி , ஒரு தேக்கரண்டி எடுத்து மோரில் கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு உடன் குணமாகும்.
நாவற்கொட்டையை நிழலில் நன்றாக காய வைத்து தூளாக்கி தினமும் காலையில் 2 அல்லது 4 கிராம் அளவு எடுத்து தேநீர் போன்று அருந்தி வந்தால் நீரழிவு எப்போதும் கட்டுக்குள் இருக்கும்.
நாவல் கொழுந்தின் சாறும், மாவிலைச் சாறும் கலந்து கடுக்காய் தூளும் கலந்து ஆட்டுப் பாலுடன் குடித்தால் எந்த ஒரு கடும் வயிற்றுப்போக்கும் உடனடியாக குணமாகும்.
நாவல் மரப்பட்டையை அவித்து அதன் நீரைப் பருகி வந்தால், குரலின் இனிமை அதிகரிக்கும். அத்துடன் தீராத தாகம், களைப்பு, இருமல், குருதிப் போக்கு போன்ற நோய்களுக்கும் சிறந்தது. நாக்கு, வாய், தொண்டை புண்களுக்கு மரப்பட்டை சாறில் வாய் கொப்பளித்தால் குணமாகும். மரப்பட்டை தூளை இரத்த காயங்களுக்கு மேல் தூவினால் விரைவில் மாறி விடும்.
- வாதம், கரப்பான், நீரழிவு, வயிற்றோட்டம். செமியாமை போன்றவற்றுக்கு மர வேரினை அவித்து பருகி வரலாம். அடிபட்ட வீக்கம் , கட்டிகள் மேல் மர வேரை அரைத்து கட்டி விட்டால் கட்டிகள் உடைந்து வீக்கம் வற்றி விடும்.
கருத்து தெரிவிக்க