முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக இதுவரை மூன்று பிரதேச செயலக பிரிவுகளில் 13889 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு,கரைதுறைப்பற்று,துணுக்காய் ஆகிய பிரதேசங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்கள் பதிவாகியுள்ளதுடன் வெலிஓயா,ஒட்டுசுட்டான்,மாந்தை கிழக்கு பிரதேசங்களில் விபரங்கள் திரட்டும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 1967 குடும்பங்களை சேர்ந்த 6296 பேரும்,கரைதுறைப்பற்று பிரதேசத்தில் 10ஆயிரத்தி 799 குடும்பங்களை சேர்ந்த 33ஆயிரத்தி 797 மக்களும்,துணுக்காய் பிரதேசத்தில் 1123 குடும்பங்களை சேர்ந்த 6ஆயிரத்தி 426 மக்களுமாக மொத்தமாக 13889 குடும்பங்களை சேர்ந்த 46519 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலகங்கள் ஊடாக பதிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன
குறித்த பிரதேசங்களில் குடிதண்ணீர் விநியோகம் இடம்பெற்று வருவதாகவும் வரட்சியின் காரணமாக விவசாயத்தை நம்பி வாழும் .குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கால்நடைகளும் மேச்சல் தரவைகள் இன்மையால் பாதிக்கப்படுவதாகவும் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்
கருத்து தெரிவிக்க