உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கோட்டாபய ஜனாதிபதி தேர்தலுக்கு சிறந்த வேட்பாளர் அல்ல! – தயாசிறி

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாய ராஜபக்ச ஒரு வலுவான தலைவராக இருந்தாலும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான சிறந்த வேட்பாளர் அல்ல என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
“சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே அதிபர் வேட்பாளராகப் போட்டியிட மிகவும் பொருத்தமானவர் என்று, பலமாக நம்புகின்றனர்.
19 ஆவது திருத்தச் சட்டத்தினால், கட்டுப்படுத்தப்படுவதால், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியானாலும் கூட, அவரால் நடவடிக்கைகளை எடுக்க முடியாது.
சிறிலங்கா பொது ஜன பெரமுனவினால் போதிய வாக்குகளை திரட்ட முடியவில்லை.
பொதுஜன பெரமுனவுடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு சிறிய முரண்பாடுகள் இருந்தாலும் அதனை தீர்த்து, இணைந்து செயற்பட முடியும்.
ஜனாதிபதி பதவிக்கு, மைத்திரிபால சிறிசேனவை முன்னிறுத்த முடியும். பிரதமர் பதவிக்கு மகிந்த ராஜபக்சவை முன்னிறுத்தலாம்” என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க