இளமையாக வாழ யாருக்கு தான் ஆசை இல்லை . தற்போது இருபது வயதுடைய வர்கள் கூட நாற்பது வயது தோற்றத்தை உடையவராக காணப்படுகின்றனர். காரணம் எமது பழக்க வழக்கங்கள். உடற்பயிற்சி இன்மை, பதப்படுத்தப்பட்ட , குளிரூட்டப்பட்ட , சத்தற்ற உணவுகளை உட்கொள்ளுவது , ஓய்வின்மை . தேவையற்ற மனக் குழப்பங்கள் போன்றனவாகும் .
உடற்பயிற்சியுடன் உடலுக்கு தேவையான சத்துக்களை நேரடியாக தரும் பழங்கள் . பழச்சாறுகள், மரக்கறிகள் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சில உணவுகளை சாப்பிட்டால் பித்த நீர் அதிகம் சுரக்கும். அதனால் தோலில் சுருக்கம், கண் பார்வை மங்குதல், ஞாபக மறதி, தலைமுடி உதிர்தல், நரைத்தல் போன்றன ஏற்படும். இவற்றை தடுக்க தினமும் தோடம்பழச் சாறு பருகி வர வேண்டும். இதில் விற்றமின் சி அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்புச் சக்தியை தருவதோடு , உடலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்கும்.
இளமையாக வாழ நெல்லிக்காயும் ஒரு சிறந்த மருந்தாகும் .
சகல வயதினரும் சாப்பிடக் கூடியது நெல்லிக்காய். இது கண்களுக்கு தெளிவையும், உடலுக்கு புத்துணர்ச்சகயையும் தருவதோடு நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கச் செய்யும். தலைமுடி உதிர்தல். நரைமுடி. நரம்பு தளர்ச்சி போன்றவற்றுக்கும் நிவாரணம் அளிக்கிறது.
நெல்லிக்காயை கொட்டை நீக்கி காய வைத்து பின் தூளாக்கியதும் தினமும் ஒரு தேக்கரண்டி தேன் கலந்தோ சுடுநீரில் கலந்தோ சாப்பிட்டு வந்தால் இளமையுடன் வாழலாம்.
கருத்து தெரிவிக்க