தற்கொலையாளி ஸஹ்ரான் குழுவில் அங்கத்தவராக இருந்த ஆமி மொஹிதீன் என்பவர் மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாரூக்கின் கீழ் பணியாற்றியதாக காத்தான்குடியின் முன்னாள் காவல்துறை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன் இன்று காத்தான்குடி காவல்துறையின் முன்னாள் பொறுப்பதிகாரி- ஆரியபந்து வெடகெதர இதனைத் தெரிவித்துள்ளார்.
காத்தான்குடியில் ஸஹ்ரானின் உரைகள் இடம்பெற்றபோது அவற்றை தாம் நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்று நிறுத்தியதாக அவர் குறிப்பிட்டார்
சில வேளைகளில் இந்தக்கூட்டங்களை ஏன் தடுக்கிறீர்கள்? அவற்றை நடத்தவிடுங்கள் என்று நீதிவான் கூட தம்மிடம் கூறியதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
2017ம் ஆண்டு சுபி முஸ்லி;ம்களுக்கு எதிரான தாக்குதல்களின்போது ஆமி மொஹிதீனை கைதுசெய்ய முயன்றபோது அவர் தப்பிவிட்டார்.
இந்தநிலையில் இராணுவத்துக்கு தகவல் தருபவர் என்பதால்தான் அவர் ஆமி மொஹிதீன் என்று அழைக்கப்பட்டார் என்று காத்தான்குடி காவல்துறையின் முன்னாள் பொறுப்பதிகாரி- ஆரியபந்த வெடகெதர சாட்சியமளித்தார்.
இதேவேளை ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் காத்தான்குடி காவல்துறையினருக்கு எவ்வித முன்னறிவித்தல்களும் அனுப்பப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்
கருத்து தெரிவிக்க