உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அமெரிக்க படைகளின் வருகை தொடர்பில் உத்தரவாதம் அளிக்க முடியாது

அமெரிக்க படைகளின் உள்நாட்டு வருகை தொடர்பில் உத்தரவாதம் அளிக்க முடியாது ஆனாலும் அவ்வாறான நிலை ஏற்படாது என புதிய பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் ஷாந்த கோட்டெகொட தெரிவிக்கிறார்.

இலங்கைக்கு அமெரிக்க படைகள் வருவது குறித்து நாட்டில் ஏற்பட்டுள்ள அச்சங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்க படைகளின் வருகை இடம்பெறாது என உறுதியளிக்க முடியாது. எனினும் அவ்வாறு இடம் பெறாது என நம்புகிறேன். இது தொடர்பான சர்ச்சைக்குரிய ஒப்பந்தத்தை பகுப்பாய்வு செய்துள்ளோம்,சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்திருக்கிறோம்.

அமெரிக்க படை வருகை தொடர்பில் ஏற்படுத்தப்படவுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் கடந்த சில மாதங்களாக சர்ச்சைக்குரிய விடயமாகியுள்ளது. அதில் கையெழுத்திடுவதற்கு முன்பதாக அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தின் முன் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

இதன் போதே இது நாட்டின் முன்னேற்றத்துக்கானது என்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு எந்தவொரு அச்சுறுத்தல்களையும் விடுக்காது என்பதையும் உறுதிப்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க