உள்நாட்டு செய்திகள்புதியவை

அமைச்சரவையில் ரவிக்கும் சாகலவுக்கும் இடையில் மோதல்!

அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க எதிர்ப்பை வெளியிட்டார்.

அமைச்சரவைக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, அமைச்சர் ரவி கருணாநாயக்க, மிதக்கும் மின்னுற்பத்தி நிலையத்தைக் கொண்ட கப்பலில் இருந்து மின்சாரத்தை பெற்றுக் கொள்வதற்கான உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்வதற்கான யோசனை ஒன்றை முன்வைத்தார்.

இதற்கு எதிர்ப்பை வெளியிட்ட அமைச்சர் சாகல ரத்நாயக்க, குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கப்பல் தொடர்பான விபரங்கள் எதுவும் துறைமுக விவகார அமைச்சர் என்ற வகையில் தமக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் தான் அதற்கு அனுமதி வழங்கவில்லை என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து, இருவருக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றது. பின்னர் இந்த ஒப்பந்தம் குறித்த பத்திரத்தை துறைமுக விவகார அமைச்சின் அனுமதியுடன் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைப்பதென்று தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க