வரி நிர்வாகத்தின் பலவீனத்தால் 2018/2019 ஆண்டுகளில் இலங்கையின் இறைவரி வருமான இலக்கு 1 ட்ரில்லியனாக உள்ள போதும் அது தொலை தூர கனவாகியுள்ளது .
நேரடியான மற்றும் மறைமுக வரி முகாமைத்துவ நிர்வாகத்தின் பலவீனமே இதற்கு காரணம் என அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
2017 ஆம் ஆண்டு வரி வருமானத்தை சரிவர பெற்றுக்கொள்ள முடியாமையினால் 17 .8 பில்லியன் ரூபாவினை பெற முடியாமல் போயுள்ளது.
வருமான நிர்வாக முகாமைத்துவ தகவல் முறைமை போதுமான அபிவிருத்தி செய்யப்படாமையே இலங்கையின் வரி நிர்வாகத்தை வீழ்ச்சி நிலைக்கு கொண்டு சென்றுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க