மகாநாயக்கர்களின் கோரிக்கைக்கு இணங்க முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் அமைச்சு பதவிகளை ஏற்றுக்கொள்வதா? என்பது தொடர்பில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் தீர்மானமின்றி முடிவடைந்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் இதனை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களை நடத்தியவர்களுடன் தொடர்பு என்ற குற்றம் சுமத்தி முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீனை பதவி விலகுமாறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.
எனினும் முஸ்லிம் சமூகத்துக்கு அநீதி இழைக்கப்படுவதாக கூறி ஏனைய முஸ்லிம் அமைச்சர்களும் அவருடன் இணைந்து தமது பதவிகளை விட்டு விலகினர்.
இதனையடுத்து குற்றம் சுமத்தப்படாத அமைச்சர்கள் தமது பதவிகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று மகாநாயகர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இது தொடர்பில் இன்று பதவியில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர்கள் கொழும்பில் கலந்துரையாடினர்.
எனினும் அதில் எவ்வித முடிவுகளும் எடுக்கப்படவில்லை என்று பைசல் காசிம் குறிப்பிட்டுள்ளார்
கருத்து தெரிவிக்க