உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

உண்ணாவிரதப் போராட்டத்தால் கொதிப்படைந்துள்ள கல்முனை நகரம்

30 வருடகாலமாக கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயத்தப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வரும் நிலையில் கல்முனை மக்களின் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகமே எமது மிக பிரதான கோரிக்கை என முன்னிறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இரண்டாவது நாளாக தொடர்கிறது உண்ணாவிரதப்போராட்டம் .
இரண்டாவது நாள் உண்ணாவிரத போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் இணைந்துள்ளனர். இரண்டாவது நாள் உண்ணாவிரத போராட்டத்தில் கி. லிங்கேஸ்வரன் பாண்டிருப்பு அனைத்து ஆலய ஒன்றியத்தின் தலைவர் அவர்களும் ஐந்தாவது நபராக உண்ணாவிரதப்போராட்டத்தில் இணைந்துள்ளார்.
உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்ந்து கல்முனை நகரம் கொதி நிலையடைந்துள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. உண்ணாவிரத போராட்டத்தில் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களும் இணைந்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க