2027 ஆம் ஆண்டில் மக்கள் தொகையில் இந்தியா சீனாவை மிஞ்சும் என ஐ.நா அறிக்கை வெளியிட்டுள்ளது. ஐ.நா சமர்ப்பித்த 2019 ஆம் ஆண்டிற்கான உலக மக்கள் தொகை அறிக்கையில் , தற்போது உலக மக்கள் தொகை 7.7 பில்லியனாக உள்ளது. இது 2050 ஆம் ஆண்டில் 9.7 பில்லியனாக அதிகரிக்கும். மக்கள் தொகையில் சீனா முதலிடத்தில் இருந்தாலும் 2027 இல் இந்தியா சீனாவை மிஞ்சும். அதன்படி, மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்திலும். இரண்டாம் இடத்தில் சீனாவும் 1.1 பில்லியன், நைஜீரியா 733 மில்லியன், யூ.எஸ்.ஏ 434 மில்லியன், பாகிஸ்தான் 403 மில்லியன் ஆகவும் மக்கள் தொகை இருக்கும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க