அழகு / ஆரோக்கியம்

வெந்தயத்தில் உள்ள மருத்துவ பயன்கள்

மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்துள்ளதுடன் , அதிகளவு சத்துக்களையும் கொண்டது வெந்தயம் .

வெந்தயத்தில் உள்ள எண்ணெய் பசை தலைமுடிக்கு வளர்ச்சியையும் கருமையையும் தருகிறது . சருமம் வறட்சி அடைவதை தடுப்பதோடு குளிர்ச்சியையும் உண்டாக்கும் . நரம்புகளை பலப்படுத்தும் . பசியை தூண்டும் . சிறுநீரைப் பெருக்கும் தன்மையும் கொண்டது .

வெந்தயக் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது . அது சருமத்திற்கு தேவையான நீர்ச் சத்தை தருவதுடன் , மலச்சிக்கலுக்கு நிவாரணம் அளிக்கிறது .

இரவில் ஒரு பிடி வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து , காலையில் வெறும் வயிற்றில் அதன் தண்ணீரை பருகி வெந்தயத்தையும் சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் கட்டுப்படும் .

வெந்தயம் மூல நோயை குணப்படுத்துவதோடு , தோல் நோய் , முடி உதிர்தல் , வாய்வு தொல்லை போன்றவற்றையும் குணப்படுத்தும்.

ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை வறுத்து தூளாக்கி சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுக்கடுப்பு . திடீரென்று ஏற்படும் வயிற்று வலியையும் குணப்படுத்தும் .

தேங்காய் எண்ணெயில் வெந்தயம், கற்பூரம் சேர்த்து ஊற வைத்து பின் அதனை தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன் . பொடுகு தொல்லைகள் நீங்கும் .

கருத்து தெரிவிக்க