நேற்று வடகொரியாவின் எல்லைப் பகுதியில் திடீரென பூமி அதிர்ந்தது. இந்த நில அதிர்ச்சிக்கு காரணம் வடகொரியாவின் அணுகுண்டு சோதனையாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் அணு ஆயுதங்களை வைத்து உலகை அச்சுறுத்தி வந்த வடகொரியாவுடன் அமெரிக்கா நடத்திய இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து, வடகொரியா மீண்டும் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. எனவே நேற்று நடந்த திடீர் நில அதிர்ச்சிக்கு காரணம் வடகொரியா நடத்திய அணுகுண்டு சோதனையாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கருத்து தெரிவிக்க