ஜெருசலேம் உணவகங்களில் இருந்து ரூபா எழுபது இலட்சத்திற்கு உணவு வருவித்து சாப்பிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு தொடரப்பட்ட வழக்கில் , இஸ்ரவேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் மனைவிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது .
மத்திய கிழக்கு நாடான இஸ்ரவேல் பிரதமர் நேதன்யாகுவின் மனைவி சாரா நேதன்யாகு , அரச மாளிகையில் அறுபது சமையற்காரர்கள் இருந்தும் , வெளி உணவகங்களில் இருந்து வாங்கி சாப்பிட்டதற்காக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது . அவர் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்ததுடன் அரசாங்கத்தின் பணத்தையும் வீணடித்த குற்றத்திற்காக சாரா மீது கடந்த வருடம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது . வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்ட சாரா , சமரசம் செய்து கொள்ள முன் வந்ததால் நீதிமன்றம் அதனை ஏற்றுக் கொண்டது . சாராவை குற்றவாளி என அறிவித்து 10.50 இலட்சம் ரூபாயை அபராத தொகையாக விதித்துள்ளது . அத்துடன் வெளி உணவகத்திலிருந்து சாப்பிட்ட தொகையையும் தவணை முறையில் செலுத்த உத்தரவிட்டுள்ளது .
கருத்து தெரிவிக்க