சினிமா

60-வது படத்தில் புதிய தோற்றத்தில் அஜித்

அஜித் தனது  60 வது படத்தில் தாடி மீசை இன்றி புதிய தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தற்போது அஜித் நடித்து முடித்துள்ளார். இந்தியில் அமிதாப்பச்சன் நடித்து வெற்றி பெற்ற ‘பிங்க்’ படத்தின் தமிழ் பதிப்பாக தயாராகி உள்ளது. இதில் வித்யாபாலன் ஜோடியாக வருகிறார். இந்த திரைப்படம் ஒகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது.

இதைத்தொடர்ந்து அஜித் தந்து 60 வது திரைப்பட வேலைகளில் இறங்கியுள்ளார். இந்த படத்தில் கார் பந்தய வீரராக நடிப்பதாகவும் தாடி மீசை இன்றி புதிய தோற்றத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க