சினிமா

சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான ஜீவி பிரகாஷின் “சர்வம் தாளமயம்”

இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கத்தில், ஏ. ஆர் ரஹ்மான் இசையில் ஜீ வி பிரகாஷ், நெடுமுடி வேணு, அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் இணைந்து நடித்த “சர்வம் தாளமயம்” ஊடகங்களின் மத்தியில் சிறந்த வரவேற்பினையும் விமர்சனங்களையும் பெற்றிருந்த நிலையில், 2019 ம் ஆண்டுக்கான 22வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவிற்கு “சர்வதேச பனோரமா” பிரிவில் அதிகாரபூர்வமாக இப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை ஜீவி பிரகாஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், கீர்த்தி சுரேஷ், சமந்தா, விஜய் தேவரகொண்டா, துல்கார் சல்மான் உட்பட பலர் நடித்த “நடிகையர் திலகம்” திரைப்படம் திரையிடப்படவுள்ளதாகவும்; இவ் விழாவானது ஜீன் 15 முதல் 24 வரை நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

கருத்து தெரிவிக்க